குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - கன்னி

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - கன்னி

வார்த்தை ஜாலத்தால் மற்றவரை எளிதில் கவரும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு அடுத்து குரு பார்வை வருவதும் ஆண்டு பிறப்பில் ராசிநாதன் நீச பங்க ராஜயோக பலனை தருவதும். உங்களின் கடந்த கால சோதனைகளிலிருந்து மீண்டும் நன்மை பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
 
கொடுத்த வேலையை சரியாக செய்து வளம் பெறுவீர்கள். பல ஆண்டுகளாக இருந்து வந்த சிக்கல்களும் விலகி, படிப்படியாக நிம்மதியை அடைவீர்கள். தீர்க்கவே முடியாது என்ற கடன் கூட விரைவில் முடியும். கலைத்துறையினருக்கு நல்ல நிறுவனத்தின் தொடர்பு மூலம் தொடர் வாய்ப்புகளும், நிகழ்ச்சிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறையினருக்கு பலவித சவால்களில் ஏற்றம் பெற்று நற்பெயர் பெறுவீர்கள். 
 
கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். வரவுக்கு மீறிய செலவுகள் குறையும். அரசியலில் சில ராஜதந்திரமான யோசனைகளை சொல்லி உங்களின் பலத்தை நிருப்பீர்கள். குறைந்த முதலீடுகளின் மூலம் அதிக லாபம் பெறும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள், வீட்டு உபயோக பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
 
பண புழக்கம் இருக்கும். மாணவர்கள் உயர் கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். மருத்துவ கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும்.
 
பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் விஷ்ணு ஆலயம் சென்று தீபமேற்றி வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்வதும், உங்களின் வாழ்வை வளம் பெறச் செய்யும்.